cq5dam.thumbnail.cropped.750.422 (2)“ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஆற்றக்கூடிய முதல் மறைப்பரப்புப் பணி, செபிப்பது. அதுவே மிகுந்த சக்தி வாய்ந்ததாகவும் உள்ளது” என்ற சொற்களை, திருத்தந்தை தன் டுவிட்டர் செய்தியாக ஆகஸ்ட் 29, இப்புதனன்று வெளியிட்டார்.

மேலும், ஆகஸ்ட் 26, கடந்த ஞாயிறு, முன்னாள் திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்கள், திருஅவையின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதன் 40ம் ஆண்டு நினைவு சிறப்பிக்கப்பட்டது.

1978ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி, ஆண்டவர் இயேசு உருமாற்றம் அடைந்த திருநாளன்று, திருத்தந்தை அருளாளர் 6ம் பால் இறையடி சேர்ந்ததையடுத்து, வத்திக்கானில் கூடிவந்த கர்தினால்கள் அவை, கர்தினால் அல்பினோ லுச்சியானி அவர்களை, ஆகஸ்ட் 26ம் தேதி, திருஅவையின் தலைவராகத் தெரிவு செய்தது.

பலரையும் வியப்பில் ஆழ்த்தும் வண்ணம் ‘ஜான்பால்’ என்ற பெயரைத் தெரிவு செய்த கர்தினால் லுச்சியானி அவர்கள், 33 நாட்களே திருஅவையின் தலைவராகப் பணியாற்றி, 1978ம் ஆண்டு, செப்டம்பர் 28ம் தேதி, இறையடி சேர்ந்தார்.

‘புன்முறுவல் பூக்கும் திருத்தந்தை’ என்று அறியப்பட்ட திருத்தந்தை முதலாம் ஜான்பால் அவர்களை, புனிதராக்கும் முயற்சிகளின் துவக்கமாக, புனித திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், 2003ம் ஆண்டு, அவரை, இறை ஊழியர் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2017ம் ஆண்டு, அவரை, வணக்கத்துக்குரியவர் என்றும் அறிவித்துள்ளனர்.

ஜெரோம் லூயிஸ் – வத்திக்கான் செய்திகள்

By admin