திருமறைக்கலாமன்றத்தின் நிறுவுனர் கலைத்தூது அருட்கலாநிதி அமரர் நீ. மரிய சேவியர் அவர்களின் விண்ணக வாழ்வின் ஓராண்டு நினைவின் பல்வேறு நிகழ்வுகள் 01ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை உள்நட்டிலும் வெளிநாட்டிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

யாழ். திருமறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் யாழ் புனித மரியன்னை பேராலயத்தில் யாழ் மறைமாவட்டக் குருமுதல்வர் அருட்திரு ஜெபரட்ணம் அவர்களின் தலைமையில் நினைவுத் திருப்பலி ஓப்புக் கொடுக்கப்பட்டது. பின்னர் மாலையில் யாழ். றக்கா வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலா முற்றத்தில் சர்வமத தலைவர்களின் ஆசியுரைகளும், இசை அஞ்சலிகளும், நினைவஞ்சலி உரைகளுடன் மரியசேவியம் என்னும் நூல் வெளியீட்டு நிகழ்வும் இடம்பெற்றன. இந்நாளின் சிறப்பு நிகழ்வாக கலைத்தூது நீ. மரிய சேவியர் அவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவாலயத் திறப்பு நிகழ்வும் நடைபெற்றது. யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் நினைவாலயத்தை திறந்து வைத்தார். அத்துடன் கனடா திருமறைக் கலாமன்றதின் ஏற்பாட்டில் கனடா ரெறன்ரோ தூய ஆரோக்கிய அன்னை பங்கில் நினைவுத்திருப்பலியும் தொடர்ந்து மலரஞ்சலி நிகழ்வும் இடம்பெற்றன. இந்நிகழ்வுகளில் ஏராளமானவர்கள் பங்குபற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.

By admin