இலங்கை நாட்டில் தற்போது நிலவிவரும் அசாதரண நிலைகுறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை 30ஆம் திகதி கடந்த புதன்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இவ்வறிக்கையில் நாட்டின் தற்போதைய நிலையை சுட்டிக்காட்டி அடுத்தடுத்து வந்த அனைத்து அரசாங்கங்களும் தற்போதைய நிலைக்கு வெவ்வேறு அளவுகளில் பொறுப்புள்ளவர்கள் என்பதனை குறிப்பிட்டு தற்போதைய அரசாங்கமும், எதிர்க்கட்சியில் உள்ளவர்களும், கூட்டமைப்பில் உள்ளவர்களும் இணக்கமான அணுகுமுறையை கடைப்பிடித்து நிலைமையை சீராக்க வேண்டும் என்பதனையும் வலியுறுத்தியுள்ளனர். அத்துடன் நிறைவேற்று மற்றும் அரசியலமைப்பு பேரவையானது பொது நலனுக்காக சேவை செய்வதற்காக அவர்களை நம்பித் தேர்ந்தெடுத்தவர்களுக்கு பொறுப்பாகவும் வெளிப்படையாகவும் இருக்க வேண்டுமெனவும் ஆட்சியாளர்கள் நாட்டை முதன்மைப்படுத்தி அனைத்துக் குடிமக்களுக்கும் அரசியல் இலாபங்களுக்காகச் செயற்படாமல் கொள்கை அடிப்படையில் செயற்பட வேண்டுமெனவும் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் தேவையற்ற ஊதாரித்தனமான வீண் செலவுகள் அனைத்தையும் விடுத்து மக்களுக்குத் தேவையான த்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்ய முன்வரவேண்டுமெனவும் தெரிவித்துள்ளனர். மேலும் நாடு தோல்வியுற்ற அரசின் வீழ்ச்சியை வேகமாக நெருங்கி வரும் நிலையில் அது மக்களின் எழுச்சியில் மீள முடியாத காயங்களை ஏற்படுத்தும் என்பதனை சுட்டிக்காட்டி தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டோருக்கு உதவிடுமாறு அனைத்து கத்தோலிக்க நிறுவனங்கள், பங்குகள், மறைத்தூதுப் பணியகத்தினர், தனியார் நிறுவனங்கள் மற்றும் நல்லெண்ணம் கொண்ட இருபாலாரையும் நாம் வேண்டுகின்றோம் எனவும் இவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

By admin