மன்னார் மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட அன்பிய மற்றும் திருப்பாலத்துவ சபை ஊக்குவிப்பாளர்களுக்கான தவக்காலத் தியானம் கடந்த 26ஆம் திகதி திங்கட்கிழமை மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் நடைபெற்றது.
ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை தயாளன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் அருட்தந்தையர்கள் கிறிஸ்ரி றூபன் பெர்னாண்டோ, விக்டர் சோசை, வசந்தகுமார் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கருத்துரைகள், வழிபாடுகள் ஊடாக ஊக்குவிப்பாளர்களை வழிப்படுத்தினார்கள்.
இத்தியானத்தில் மன்னார் மறைமாவட்டத்தை சேர்ந்த 300ற்கும் அதிகமான ஊக்குவிப்பாளர்கள் பங்குபற்றி பயனடைந்தனர்.